----------- முற்றும் ----------------
"ஹூம்.. இந்த இன்டர்நெட்ட வெச்சுக்கிட்டு கண்டவனெல்லாம் கத எழுதுறான். இதுல ஹாரர் ஸ்டோரி வேற.".
கூகுள் க்ரோமை எரிச்சலாய் கொன்றான். பேய் இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றி பேசும் போதும், கதையில், திரையில் பார்க்கும் போதும் கொஞ்சமாய் திகில் மனதின் ஓரம் ஒட்டிக் கொள்கிறது. சற்று நேரம் முன் வரை குளுமையாய் தெரிந்த ஜன்னல் காற்று இப்போது கொஞ்சம் அமானுஷ்யமாய் இருந்தது. பட பட வென காற்றில் ஆடிய செய்தித் தாளின் மேற்பக்கங்கள் இப்போது இயல்பாய் தெரியவில்லை.
"கில் தெம் ..." 'தட தட தட ' - திடீரென்று வந்த சத்தம் உடலை ஒரு வினாடி நடுங்க செய்தது.
"ஷிட்... இந்த மாதிரி பாப்-அப் எல்லாம் எவன் டிசைன் பண்றானோ. கர்ண கொடூரமா ஒரு ஆடியோ வேற."
எப்படியா உயிர் பெற்ற பாப்-அப் ஜன்னல்களை எல்லாம் கோபத்தோடு மூடினான். எரிச்சலில் கூட ஒரு மகா தத்துவம் தோன்றியது. திறக்க படும் எல்லா ஜன்னல்களிலும் வசந்தம் மட்டுமே வருவதில்லை. சிந்தனையில் மூழ்கும் முன்னரே "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் " .... கதறிய அலாரம் சத்தம் உடலில் சில்லென்று ஒரு அதிர்வை பரப்பியது. அலைப்பேசி 9.30 p.m . "Talk to Appa " என்று ஒரு செய்தியோடு மின்னிக் கொண்டிருந்தது.
"வித்யா ஆஆஆ " மனதிற்குள் கடிந்து கொண்டே அலாரத்தை அமைதிப் படுத்தினான். முக்கால் வாசி நேரம் வேலையில் மூழ்கிக் கிடக்கும் இவனை இப்படி ஏடா கூடமான ஒலிகளை கொண்டு நினைவூட்டல்கள் பதிவு செய்து வைப்பது அவள்தான். இப்போது அப்பாவிடம் பேச மனமில்லை. காலையில் பேசிக் கொள்ளலாம். வேலைக்கு நடுவில் பத்து நிமிடம் ஓய்வுக்காக படித்த கதை கூட இனியதாய் இல்லை. அசதியும் எரிச்சலும் இன்னும் அதிகமானது போல் தெரிந்தது. இண்டர்காம் ஐ கையில் எடுத்தான்.
"வித்யா...இந்த அலாரம் வைக்காதன்னு எத்தன தடவ சொல்றது!.."
".........."
"ப்ளீஸ் ப்பா..இந்த மாதிரி சவுண்ட் தலைல அடிக்கிற மாதிரி இருக்குது"
"..........."
"யா, காபி இஸ் எ பெட்டர் ஐடியா. தேங்க்ஸ்" சொல்லிவிட்டு இண்டர்காமுக்கு ஒய்வு கொடுத்தான்.
'க்ரீச்ச்' - பாத்ரூம் கதவை மெல்ல திறந்தான். சிறு வயதில் பாத்ரூம்கள், கதையில் படித்த பேய்களின் கூடாரமாகவே தெரியும். கையை துலாவி லைட் ஆன் செய்யும் வரை மனது திக் திக்கென்றிருக்கும், சில சமயம் உருவமில்லா விரல்கள் வந்து கையை பிடித்துக் கொண்டு லைட் ஐ போட விடாமல் தடுப்பது போல் ஒரு உணர்வு தோன்றும். அறைக்குள் ஒளி வரும் வரை இதயத் துடிப்பு இரட்டிப்பாகும். இன்னும் கூட உள்ளூர பயம் இருந்துக் கொண்டேதான் இருக்கிறது. சிறு பிள்ளையாய் இருந்தால் அப்பாவையோ அம்மாவையோ துணைக்கு அழைக்கலாம். அவர்கள் தைரியசாலிகள் என்று அப்போதெல்லாம் தோன்றியதுண்டு. வளர வளர பயங்கள் மறைவதில்லை, மறைக்கப் படுகின்றன என்று பின்னரே புரிந்தது. விளக்கை ஒளிர விட்டு குழாயை வேகமாய் திறந்து விட்டான். கையால் நீரை முகத்தில் தெளித்ததும் கையெல்லாம் ஒரு வேலை ரத்தமாய் மாறிவிடுமோ என்று ஒரு முட்டாள்தனமான உணர்வு.
"சே, இந்த பேய் படம் எடுத்தவனெல்லாம் காலி பண்ணனும்". எரிச்சலாய் இருந்தது. பேய் பற்றிய நிறைய கற்பனைகளை திரைப்படங்கள் ஊட்டியுள்ளன. இந்த பேய் கதையை இன்று படித்திருக்க கூடாதே என்று அவனுக்கு தோன்றியது. ஏதோ அறைக்குள் அசைவது போல் தோன்ற நிமிர்ந்து பார்த்தவன் சட்டென்று அனிச்சையாய் பின்னே நகர்ந்தான்.
"இந்த கண்ணாடி சனியன சின்க் மேல எதுக்கு வச்சுத் தொலஞ்சோம்"
சின்ன வயதில் இருந்து படித்த, பார்த்த, கேட்ட பேய் கதைகள் அனைத்திலும்
கண்ணாடிக்கு பெரும்பங்கு இருந்தே உள்ளது. மனதில் பயம் இருக்கும் நேரமெல்லாம் அவன் பாத்ரூம் கண்ணாடிகளை பார்ப்பதை தவிர்த்து விடுவான். விளக்குகள் எரியும் போதும், கண்ணாடிகள் தவிர்க்கப் படும் போதும் பேய்கள் எங்கோ மறைந்த விடுகின்றன. வேகமாய் கண்ணாடியை விட்டு நகர்ந்து கதவை திறக்க போனான். கதவை திறந்ததும் சட்டென்று உடல் முழுதும் ஒரு பய மின்னல் பாய்ந்தது. வேகமாய் இரண்டடி பின்னால் போனான்.
"பிசாசு, ஏண்டி இப்டி கதவுக்கிட்ட வந்து நிக்குற, அதுவும் தலைய விரிச்சுப் போட்டுட்டு"
"ஏங்க, கதவுக்கிட்ட நிக்கிறது கூட தப்பா!!! போனா போகுது, தல வலிக்குதுன்னு சொன்னீங்களே அப்டின்னு காபியோட வந்து நின்னேன்"
"எம்மா, அதுக்காக வாசல்லையே வந்து நிக்கனுமா..ஒம் பசங்க என்ன பண்றாங்க . நீ எதுக்கு கொண்டு வந்த"
"அவுங்க படிச்சிட்டு இருக்காங்க..இந்தாங்க"
காபியை வாங்கி ஒரு முறை உறிந்து விட்டு, "தேங்க்ஸ் பா..கொஞ்சம் பெட்டரா இருக்கு. நன்றி மனைவியே". சொல்லிவிட்டு கணிப்பொறி முன்னால் அமர்ந்தான்.
"லொள்ளுன்னு கொலச்சுட்டு நன்றிக்கொன்னும் கொறச்சல் இல்ல" என்று முணுமுணுத்துக் கொண்டாள். அவன் வேலையில் குதிக்கும் முன்னரே கேட்டு விடலாம் என்று
"ஏங்க, அப்பாவுக்கு போன் பண்ணீங்களா?" என்று தயங்கித் தயங்கி கேட்டாள்.
"வித்யா, நிறைய தடவ சொல்லிட்டேன். நான் வேலை செய்யும் பொது என்ன தொந்தரவு பண்ணாத..ஒன்னும் ஒலகம் அழிஞ்சிடாது, நாளைக்கு பேசிக்கிறேன்"
"வீட்லயும் இந்த வேலைய கட்டிட்டு அழுறதுக்கு ஆபிஸ் லயே இருந்திருக்கலாம்" சொல்லிவிட்டு பதில் கூட கேக்காமல் அறையை விட்டு வெளியே கிளம்பினாள். திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனதற்கான அடையாளம் அது.
காபியை உறிந்துக் கொண்டே ஓரிரு நிமிடம் எதையும் யோசிக்காமல் அமைதியாய் இருந்தான். அமைதி. மனம் கொஞ்சம் லேசானது போல் இருந்தது. இன்னும் ஓரிரண்டு நிமிடம் வேறு எதாவது செய்துவிட்டு வேலையை தொடரலாம் என்று மெயில் பாக்ஸ் திறந்தான். வழக்கம் போல் அத்தனை விளம்பர மெயில்கள். யாருக்காக இதெல்லாம் அனுப்புகிறார்கள் என்று தோன்றியது. கண்கள் மெயில் சப்ஜெக்ட் கலை மேய்ந்து கொண்டிருக்க, ஒரு வாசகம் கவனத்தை ஈர்த்தது. "உன்னுடைய கடைசி 30 மணி நேரம்" இதென்ன புது விதமான ஸ்பாம் ஆ என்று நினைத்து அந்த மெயிலை கவனமாக திறந்தான்.
உள்ளே
"உன்னுடைய கதை முடிகிறது, இன்னும் 30 மணி நேரத்தில். - வாசாபி ". 9.29 மணிக்கு வந்திருந்தது.
"ம், வர வர எப்டி எல்லாம் ஜன்க் வருது, அந்த கத படிச்சே இருக்க கூடாது, ஏதோ மால்வேர் வந்துடுச்சு போல, எத்தன ஆண்டி-வைரஸ் ஆண்டி-ஸ்பாம் போட்டாலும் இதெல்லாம் முழுசா நிறுத்த முடியல " மனதுக்குள் எரிச்சல் பட்டுக் கொண்டான். தலை வலி குறைந்த மாதிரி இல்லை. இருந்தாலும் வேலையில் கவனம் செலுத்த தொடங்கினான். கடிகாரம் ஒவ்வொரு நொடியையும் இழந்து கொண்டிருந்தது.
---------------------------------
'சஷ்டியை நோக்க சரவணா பவனா..' மங்களகரமான அலாரத்தோடு காலை புலர்ந்தது. சிறு வயதில் 'கிர்ர்ர்ர்ர்' என்று பக்கத்து வீட்டையும் சேர்த்து எழுப்பும் அலார சத்தம் கேட்டு படபடப்போடு எழுவது எரிச்சலாய் இருக்கும். மற்ற நேரங்களில் அமைதியை கெடுக்கும் கைப்பேசி காலையில் அமைதியாக எழுப்புவது ஆறுதலாய் இருந்தது. கண்களை திறந்தும் திறக்காமலும் போனை கையால் தடவியே அலாரத்தை நிறுத்தினான். மெல்ல கண்களை திறந்து மறுபக்கம் திரும்பியவன், "ஷிட்ட்ட்ட்ட்" என்று கதறி விடுக்கென்று பின்னே தாவினான். ரத்தம் ஒரு நிமிடம் உறைந்து போனது. கட்டிலின் ஒரு பக்கம் தலையில் தடாலென்று இடித்தது. ஓரிரு வினாடிகளில் இயல்பானான். கேக்க பொக்க வென்று சிரித்த 8 வயது மகனை பார்த்து கோபம் வந்தது.
"எரும எரும , என்னடா கருமம் இது." கத்தினான்.
"ம்ம்ம்...நேத்து நீங்க ஸ்கூல் பங்க்ஷன் வரேன்னு சொல்லிடு வரல. அதான் நான் நேத்து போட்ட வேசத்த உங்களுக்கு காட்டலாம்னு காலைலேயே மேக்-அப் பண்ணிட்டு வந்தேன்" அப்பாவியாய் சொன்னான்.
உடலை ஒட்டிய வெள்ளை ஆடையில் பரவலாய் அங்கங்கே ரத்த கீற்றுகள். ஒரு கண் மட்டும் விகாரமாய் பெரிதாக, ஆனால் பாதி வெந்ததும் வேகாமலும், இன்னொரு கண் எதோ களிமண் போல் இருக்க, மூக்கு வாயெல்லாம் விகாரமாய் புள்ளிகள். இத்தனை அருவருப்பாய் பேய் மாஸ்க்குகள் பார்த்தால் பேய்க்கே கோபம் வரும்.
"என்ன வேஷம் டா இது, உங்க ஸ்கூல் ல யாருக்கும் அறிவே இல்லையா"
"அது ஒரு பேய் ஸ்டோரி ப்பா..நான்தான் மெய்ன் க்யாரெக்ட்டர்."
"உனக்கு கரெக்ட் க்யாரெக்ட்டர் தான்..", எரிந்து விழுந்தான். "டோன்ட் டூ திஸ் ஸில்லி திங் அகேன்".
"ஏம்பா, பயந்துடீங்களா ? " குறும்பாய் சிரித்துக் கொண்டு கேட்டான். வழக்கமாக பிள்ளைகளை அடிப்பதில்லை, ஆனால் அன்று முதுகில் ஒன்று வைக்க வேண்டும் போல் இருந்தது.
"ஸ்டாப் லாபிங்க்.. இட்ஸ் நாட் ஃபன்னி, அப்பாக்கு கோபம் அதிகமாறதுக்கு முன்னாடி ஓடிடு", மிரட்டிவிட்டு பாத்ரூம் பக்கம் நடந்தான்.
வாடிய முகத்தோடு, "டேய் அண்ணா, உன் ஐடியா வால நான் திட்டு வாங்கிட்டு இருக்கேன்" என்று முனங்கிக் கொண்டே கீழே நடந்தான் சிறுவன்.
_______________________________
"வழுக்கினா சுளுக்கு வரும், ஆனா, அந்த பொண்ணுக்கு சுளுக்கினதுல அவென் வழுக்கி விழுந்துட்டன்.." FM இல் பிரபல RJ பின்னிக் கொண்டிருக்க காரை நிதானமாக ட்ராபிக் நடுவே புகுத்திக் கொண்டிருந்தான். அலுவலகம் பக்கம் வர, FM இல் இப்போது கார்த்திக் காதலை சொல்லிக் கொண்டிருக்க, ரோடோரம் எதோ கூட்டம் சேர்ந்திருந்தது. ஹார்ன் அடித்துக் கொண்டே ஓரமாய் ஊர்ந்து கூட்டத்தை கடக்க முயற்சி செய்தான். கூட்டத்தின் நடுவில் தரையை சிவப்பு திரவம் நனைத்துக் கொண்டிருந்தது. அங்கங்கே ஆடை கிழிந்து உடல் வழியே ரத்தம் கசிந்துக் கொண்டிருந்த ஒரு உடல். கார் மெல்ல ஊர்ந்தது செல்ல, அவளது முகம் கண்ணில் பட்டது. வாய் அகல திறந்திருக்க, கன்னச் சதை கீழே தொங்கிக் கொண்டிருக்க, உதடுகள் கிழிந்து ரத்தக் கீற்றுகளோடு, கண்கள் குத்தீட்டி போல் இவன் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு வினாடி, அவள் இவனையே உற்றுப் பார்ப்பது போல் இருந்தது.
"ப்ப்பூ" , ஆழமாக மூச்சிழுத்து, ஆசுவாச படுத்திக் கொள்ள முயற்சி செய்தான். "ரிலாக்ஸ், ரிலாக்ஸ்" உதடுகள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டன.
முந்தய இரவில் அந்த கதை படித்ததில் இருந்தே மனதும் சரியில்லை, நடப்பதெல்லாம் கூட சரியாக இல்லாதது போல் இருந்தது. உடனே அந்த மெயில் ஞாபகம் வந்தது. காரை ஆபிஸ் வாசலில் நுழைத்து, வேகமாய் இக்னிஷனை அணைத்துவிட்டு, சாவியை செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டு அவசரமாய் கைபேசியை எடுத்து ஜிமெயில் திறந்தான். வழக்கம் போல் குவிந்திருந்த ஸ்பாம்களுக்கு நடுவில் கண்கள் மேய்ந்தன. "கடைசி 24 மணி நேரம்" என்று காலை 3.29 க்கு ஒரு மெயில். பதட்டமாய் திறந்தான், உள்ளே ஒரே வாசகம்.
"கடைசி முழு இரவு, கடைசி 24 மணி நேரம் - வாசாபி ". ஒரு புறம் மனதில் கலவரம் அதிகமானது, இன்னொரு புறம் இது அதீத கற்பனையோ என்றும் தோன்றியது. புது விதமான இனைய தள விளையாட்டாய் இருக்கலாம் என்று மனம் சமாதானமும் செய்துக் கொண்டது. முதல் மெயில் 9.29 க்கு, இரண்டாவது மெயில் 3.29 க்கு, சப்ஜெக்ட்டில் 30 மணி நேரம், 24 மணி நேரம் ...மூளையில் சுருக்கென்று எதோ குத்த, வேகமாய்புதிய மெயில்களை பார்க்க தொடங்கினான். கைபேசியில் மணி 9.28 காட்டிக் கொண்டிருந்தது. இதயம் வேகாமாய் துடித்தது. அணிச்சை செயலாய் கால்கள் அலுவலகம் உள்ளே நடக்க, ஒரு கை ஐ.டி. கார்டை சென்சார்களில் காட்டிக்கொண்டு முன்னே சென்று கொண்டிருந்தான். ஏ.சி இருந்தும் உடல் வேர்த்து ஒழுகியது. இன்னொரு கை மீண்டும் மீண்டும் ஜிமெயில் ஐ ரெப்ரெஷ் பண்ணிக் கொண்டே இருந்தது. மணி 9.29, புதிய மெயில் எதுவும் வரவில்லை. கண்களின் அத்தனை செல்களும் கைபேசியை நோக்கியே பார்த்துக் கொண்டிருந்தன, உதடுகள் காய்ந்து வெடிப்பது போல் இருந்தது. தலைக்குள் பாரம் இறங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் இதயத்துள் ஊசி நுழைத்துக் கொண்டிருந்தது. இன்னும் சிலவினாடிகளில் 9.29 கடந்து விடும். ஜிமெயில் ரெப்ரெஷிங் என்று சொல்லி சக்கரத்தை சுற்றிக் கொண்டிருந்தது. கைபேசி 9.30 காட்டியது. மனம் கொஞ்சம் அமைதியானது போல் இருந்தது. ரெப்ரெஷிங்க் நின்று, அணைத்து மெயில்களும் சட்டென ஒரு வரிசை இறங்கின. "கடைசி 18 மணி நேரம்" என்ற சப்ஜெக்டோடு 9.29 க்கு ஒரு மெயில்.
உடலில் தீ மீண்டும் பற்றிக் கொண்டது. கைகள் நடுங்க அலைபேசி நழுவி கீழே விழுந்து, உரை தனியாகவும் பாட்டரி தனியாகவும் பறந்து சிதறியது. அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டுத் திரும்பி பார்த்தனர். "என்ன சாமி, அடுத்த ஐ-போன் ரிலீஸ் க்கு ரெடி ஆகிடீங்க போல" என்று ஒருவன் கலாய்க்க, சிரிக்கும் நிலையில் இல்லாமல் அவனை முறைத்துப் பார்த்தான். சிதறிய பாகங்களை பொறுக்கி, ஒன்று சேர்த்து வேக வேகமாக மூடி, அதற்க்கு உயிர் கொடுத்தான். அது அவசரம் புரியாமல் மெதுவாய் விழித்துக் கொண்டிருந்தது. பொறுமை இழந்து முகத்தில் வியர்வை திப்பிகளுடன், ஜிமெயிலை திறந்தான். கடைசியாய் வந்த அந்த மெயிலை திறந்தான். உள்ளே ஒரே வாசகம், "பயத்துடன் தொடங்கிய இறுதிப் பகல், கடைசி 18 மணி நேரம் - வாசாபி ".
இவனுக்கு உடல் தூக்கி வாரிப் போட்டது. இதை விளையாட்டாய் எடுக்கக்கூடாதோ என்று தோன்றியது. யாரோ தன்னை கவனித்துக் கொண்டே இருந்திருக்க வேண்டும். ஆனால் எதற்கு என்று புரியவில்லை. மனதில் குழப்பம் அதிகமானது. ஒரு வேலை, கூட இருக்கும் யாரவது விளையாடுகிறார்களா!! சட்டென எதோ புரிந்தது போல் இருந்தது, கண்கள் கொஞ்சம் பிரகாசமானது. வேகமாய் அலைபேசியில் விரல்கள் விளையாடியது, எதிர்முனையில் "கூட மேல கூட வச்சு " இனிமையாய் பாடிக் கொண்டிருந்தது.
"ஹே வித்யா, எவ்வளவு நேரண்டி? என்ன பண்ணிட்டு இருந்த?"கத்தினான்.
"சரி, அத விடு, கார்த்திக் நேத்து நைட் எப்போ தூங்கினான் னு தெரியுமா?
".................."
முகம் இன்னும் கொஞ்சம் தெளிவானது.
"நாலு மணி வரைக்கும் என்ன பண்ணான்!! இப்பவே என்ன பெரிய ஸ்கூல் ப்ராஜெக்ட். ரொம்ப ஓவர் தெரியுமா"
போனை வைத்தவன் கொஞ்சம் நிம்மதியானான். அவனுடைய 12 வயது மகன் கார்த்திக் இது போல் முன்னவே விளையாடி இருக்கிறான்.
"'யூ ஆர் எ மில்லியனர்', 'வீ ஆர் கோயிங் டூ ஸ்டீல் யுவர் கார்', 'யு ஆர் அரெஸ்டட்" என்று பல முறை விளையாடி இருக்கிறான். சொன்னாலும் கேட்பதில்லை. நேற்று கூட கதை படிக்க தொடங்கும் முன்னர் அவன் தன்னுடைய அறைக்கு வந்து போனது நினைவுக்கு வந்தது. இன்று காலை நடந்ததும் அவனுக்கு தெரிந்திருக்கும், இன்னைக்கு ஸ்கூல் லீவ் வேறு, அப்போ இது எல்லாம் அவன் வேலையாத்தான் இருக்கும். "
மனதுக்குள் பாரம் நிறைய குறைந்திருந்தது. தலை வலி குறைந்ததில், வேலை செய்ய மும்முரமடைந்தான். வினாடிகள் மறுபடியும் இறந்துக் கொண்டிருந்தன.
____________________
மதியம் தலை வலி கொஞ்சம் அதிகமானது போல் இருந்தது. முந்தைய இரவின் குறைவான தூக்கம், குழம்பிய மன நிலை, உடலும் மனதும் அசதியாய் தெரிந்தது. காபி அறை வரை சென்று வரலாம் என்று கிளம்பினான். காபி ஒரு அங்கிகரிக்கப்பட்ட போதை. அது இல்லாத ஒரு உலகில் பலர் அலுவலக மாடியில் இருந்து குதித்து இருக்கலாம். அந்த நேரத்தில் காபி மெஷினின் சத்தம் காபி ராகம் போல் இருந்தது. சுடச்சுட கோப்பையில் இருந்து வந்த ஆவி நாசியின் வழியில் சென்று மூளையில் வயலின் மீட்டியது. இளஞ்சூடு பரவிய நெற்றியில் கொஞ்சம் பாரம் குறைந்தது. ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டே தேவ திரவத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். யாரோ உள்ளே நுழைந்த சத்தம் அந்த நேரத்து அமைதியை கொஞ்சம் கெடுத்தது. தலை கவிழ்ந்து, கண் மூடி கோப்பையை முகர்ந்து கொண்டிருந்தான். ஒரு வித மயக்கத்தில் இருந்து கண்கள் மெதுவாய் திறந்தன. கண வினாடியில் உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்தது. ஜன்னல் கண்ணாடியில் அந்த பிம்பம். காலை விபத்தில் இறந்து கிடந்த அந்த பெண், அதே ரத்தக் கறை படிந்து. வேகமாய் பின்னால் திரும்பினான். எந்த உணர்ச்சியும் இல்லாத அவள் அவனை கூர்ந்துப் பார்த்தாள், அவள் பார்வை அவன் கை நோக்கி போக, அவள் பார்வையை தொடர்ந்த அவன் கண்கள் அனிச்சையாய் தனது கைகளை பார்த்தது. ஆவி பறக்க கோப்பையில் கொதித்துக் கொண்டிருந்தது ரத்தம். பார்த்த அதே நொடி ஒரு துளி ரத்தம் மேல் இருந்து அதனுள் விழுந்தது, அவனது இன்னொரு கை வாயை தொட்டுப் பார்க்க எங்கும் ரத்தம்,,நிமிர்ந்த நொடி அவன் மூச்சு படும் தூரத்தில் அந்த பெண் முகம் முழுக்க சிவப்பாய் சிரித்துக் கொண்டிருந்தாள். கை கால்கள் அசைய மறுக்க, வாய் திறந்தாலும் அலறல் வர மறுக்க, உடல் எல்லாம் கட்டிப் போட்ட படி இருக்க, அதிரிச்சியில் கண் விழித்தான். முகம் வியர்த்துப் போய் இருந்தது. ஒன்னும் புரியவில்லை. எதிரில் கணிப்பொறியில் மனைவியும் மகன்களும் சிரித்துக் கொண்டிருந்தனர். அலுவலகத்தில் தூங்குவது முதல் முறை அல்ல, ஆனால் இன்று அந்த தூக்கம் அசதியை இன்னும் தான் அதிகப் படுத்தியது. போனை எடுத்து எண்களை தட்டினான். "ஜகன், ஒரு காபி அடிச்சிட்டு வருவோமா?"
__________
பகல் பொழுது எப்படியோ முடிந்தது. குழப்பங்கள் இருந்தாலும், அலுவலகத்தில் முடிக்க நினைத்த பணிகள் முடிந்தது கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. வீட்டிற்க்கு வந்த போது "என் கணவன், என் கண்ணீர்" தொலைக்காட்சி தொடரின் 2472 வது பாகத்தில் மூழ்கிக் கொண்டிருந்தாள் மனைவி.
"ஏம்மா, பசங்க வீட்ல இருக்கும் போது இதெல்லாம் பாக்காதன்னு எத்தன தடவ சொல்றது!"
"எனக்கு பொழுது போக வேணாமா!!, நான் என்ன எல்லார் மாதிரி நாள் பூராமா பாக்குறேன்,,ஒரு நாளைக்கு 10 கூட பாக்குறது இல்ல.."
"நீ எத்தன வேணும்னா பாரு, பசங்க இருக்கும் போது மட்டுமாவது அத ஆப் பண்ணி பை, இல்லாட்டி ஏதாவது உருப்படியா பாரு. வாழ்க்கைல இருக்குற டென்ஷன் பத்தாதா!"
"வந்ததும் ஆரம்பிக்காதீங்க. ரெப்ரெஷ் பண்ணிட்டு வாங்க, காபி தரேன். பசிச்சா சொல்லுங்க, சாப்பாடு பண்ணிடலாம்."
"நீ என்னவோ பண்ணு, இதுக்கு என்னோட பேய் கனவே பரவாயில்ல போல இருக்கு." முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றான். மிகவும் கொடூரமான இசையுடன், ஐந்தாறு முகங்களை மிகவும் ஸ்லோ மோஷனில் க்ளோஸ்-அப் செய்து கொண்டிருந்தது தொலைக்காட்சி பெட்டி.
__________________
"நான் சொல்லல, நமக்கு நெறைய நேரம் இருக்குனு..அட்ரஸ் கூட கிடைச்சிருச்சு..புடிச்சிடலாம்..இங்க ரெண்டு பேர் சர்வேலென்ஸ் க்கு இருப்பாங்க..நீங்க எல்லாரும், எப்பவும் போல லைட் எல்லாம் ஆப் பண்ணிட்டு தூங்குங்க, ஆர், தூங்குற மாதிரி நடிங்க.. உங்க பெட் ரூம் கு வெளில ஒருத்தர் காவல்கு இருப்பார்..டோன்ட் பீ ஸ்கேர்ட்."
கைபேசியின் வெளிச்சத்தில் முன்னேறி, சுவர் ஓரம் இருந்த பொத்தான்களை அழுத்தி அறைக்கு விளக்கேற்றினான். இன்னும் வீட்டிற்க்குள் ஒரு சலனமும் இல்லை.
----------------------------
அடுத்த அரை மணி நேரத்திருக்குள் அந்த வீடு முழுக்க வெளிச்சமும் கூட்டமும்.. ஆம்புலன்ஸ், காவலர்கள், தடய வல்லுனர்கள் என வீடு நிறைந்திருந்தது...அங்கங்கு "crime scene " என்ற டேப் ஆடிக் கொண்டிருந்தது.
"நாலு கோல்ட்-ப்லட்டட் மர்டர்ஸ், ரொம்ப கொடூரமா இருந்தது சார், ஹீ லுக்ஸ் லைக் எ சைக்கோ கில்லெர்..அவுங்க ரத்தத்த எல்லாம் குடிசிருப்பான்னு தோணுது..எதுவும் பேச மாட்டேங்குறான், அவன் மேல ஒரே பொன வாட.."
"............"
"எஸ் சார், இட் வாஸ் ஹார்ரிபில்"
".........."
"ஷுர் சார்.."
வந்த கட்டளைகளை அங்கிருந்த மற்றவர்களிடம் பிறப்பித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்..போகும் வழியில் சுவாமிக்கு தகவல் சொல்லினான்.வித்யா அழுது கொண்டே நன்றி சொன்னாள்.. எல்லாம் சரி ஆனது போல் இருந்தாலும், அந்த கொலைகாரனுடைய பார்வை இவனை ரொம்ப பாதித்திருந்தது. நடுவில் இரண்டு முறை வண்டியை நிறுத்தி வாந்தி எடுத்தான்.. GH சென்று அங்கு எல்லாம் முடித்து விட்டு மீண்டும் காவல் நிலையம் வரும் போது காலை மணி 3 தொட்டு இருந்தது. எரிச்சல், பயம், அசதி என்று எல்லாம் சேர்ந்து அவன் கண்களை தின்றன. அந்த கொலைகாரனை பார்க்க போவது வேறு மனதின் அடி ஆழத்தில் ஒரு பய அலையை அவிழ்த்து விட்டிருந்தது. வேகமாய் உள்ளே நுழைந்தவன்,
"என்னய்யா, ஏதாவது சொன்னனா?? "
"சார், அவன் கிட்ட போகவே பயமா இருக்கு, அருவருப்பாவும் இருக்கு சார்.. கெட்ட நாத்தம், பக்கத்துல போகவே முடியல, அவென் பாக்குறது வேற கொடூரமா இருக்கு சார்"
"போலீஸ் னு வெளில போய் சொல்லிடாதையா.." கோபமாய் வந்தாலும், அவனும் அந்த நிலையில்தான் இருக்கிறான் என்பது கொஞ்சம் அவமானமாய் இருந்தது.
"நானே போய் பாக்குறேன்" - வேறு வழி இல்லாமல் விசாரணை செய்ய கிளம்பினான். நாய் வேஷம்!!
உள்ளே.... அந்த கொலைகாரன் இன்னும் கண்களை மூட வில்லை.ஒரு வேளை அவன் மந்திர வாதியாய் இருப்பானோ என்று ஒரு சந்தேகம் எல்லோர் மனதிலும் இருந்தது. எத்தனை முயன்றும் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பயத்தை தாண்டிய கோபத்தோடு சேகர் அவனை அடிக்க கை ஓங்கிய நேரம், அதுவரை அசையாமல் அமர்ந்திருந்த அந்த மனிதன்அப்படியே பின்னால்சாய்ந்தான். திறந்திருந்த கண்கள் மூடியது. சேகரின் கைபேசியில் மணி 3.29 a.m என்று காட்டிக் கொண்டிருந்தது.
____________________
காலை 8 மணியளவில் அரசு மருத்துவமனை வாசலுக்கு வந்திறங்கியது சேகரின் வண்டி..தூக்கமில்லாத இரவு அவன் கண்களில் நன்கு தெரிந்தது. நண்பனுக்கு வந்த மிரட்டல், நான்கு கொலைகள், காவல் நிலையத்தில் கொலை காரனின் மர்ம சாவு, அதுவும் அவன் சுவாமிக்கு குறித்து வைத்திருந்த அதே நேரத்தில்..அரை நாளில் இவ்வளவு நடந்திருந்ததை அவனுடைய மூளை இன்னும் முழுதாய் கிரகிக்க முடியாமல் தவித்தது.
"இம்பாசிபிள் டாக்டர்...என்ன சொல்றீங்க?"
"நான் சொல்லல சார், போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் சொல்லுது"
"யார் பண்ணது?"
"ரிப்போர்ட் ல இருக்கு பாருங்க, Dr.வெங்கட். அவர் ரிபோர்ட் தப்பா சொல்ல வாய்ப்பே இல்ல"
"சார் ஆனா, இது கரெக்ட் ஆ இருக்க முடியாது,, அவன் செத்த நேரம் கண்டிப்பா தப்பு "
"சார், நாங்க ஒன்னும் எங்களுக்கு தோன்ற நேரத்த அதுல போடறது இல்ல,,,அல்கார் மார்டிஸ், ரிகர் மார்டிஸ் , லிவர் மார்டிஸ், மற்ற பாடி பார்ட்ஸோட டீகே லெவல் எல்லாம் பாத்து தான் சொல்றோம்...இது ஜோசியம் இல்ல, சயன்ஸ்."
"அம் சாரி சார்..உங்கள அபெண்ட் பண்ணி இருந்தா மன்னிச்சிருங்க..ஆனா, அவன நான் தான் அர்ரெஸ்ட் பண்ணின்னேன். அவன் செத்து 2 நாள் கிட்ட ஆகுதுன்னு சொல்றீங்க.. மற்ற மூணு பேரோட டெத் டைம் அதுக்கப்புறம் தான் இருக்கு ..இது எதுவுமே நான் பாத்ததோட சிங்க ஆகல சார்.. எங்கயோ தப்பு நடக்குது"
"சார், அத கண்டு பிடிக்க வேண்டியது உங்க வேல.. நாங்க எங்க ரிபோர்ட்ட கரெக்டா ரெடி பண்ணிட்டோம்"
அதற்க்கு மேல் அங்கு பேச எதுவும் இருந்ததாய் தெரியவில்லை. எங்கோ தவறு இருப்பது மட்டும் புரிந்தது.
____________________
கார்த்திக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
"அப்பா, எனக்கு பசிக்குது, அம்மா எங்க??"
சுவாமி பதில் சொல்லாமல் கணிப்பொறியில் எதோ செய்து கொண்டிருந்தான். அப்பாவுக்கு வேலை செய்யும்போது தொந்தரவு செய்வது பிடிக்காது என்று தெரிந்து, பதில் கிடைக்காமலேயே , மறுபடியும் கதவை மூடிவிட்டு வெளியே போனான் கார்த்திக்.
அவன் திறந்து வைத்திருந்த மெயிலில் "உன்னுடைய கதை முடிகிறது, இன்னும் 30 மணி நேரத்தில். - வாசாபி" என்று எழுதி இருந்தது. எந்த உணர்ச்சியும் இல்லாமல் செண்ட் பட்டனை அழுத்தினான்.. வாயோரம் இருந்த சிவப்பு கரையை நாக்கால் துடைத்துக் கொண்டான். கட்டிலின் கீழே, கழுத்தில் அறுபட்டு, ரத்தம் முழுக்க குடிக்கப்பட்டு, அமைதியாய் படுத்திருந்தாள் வித்யா"
-------முற்றும் ---------------
ச, இன்டர்நெட் வந்தாலும் வந்துச்சு..கண்டவனெல்லாம் ஹார்ரர் ஸ்டோரி எழுதுறான். சொல்லிக் கொண்டே இருக்கையில், அவனுடைய கணிப்பொறியின் கீழ் மூளையில் "you have got a mail" என்று அறிக்கை வந்தது. அதை கிளிக் செய்ய, திறந்த அந்த மெயில் "கடைசி 30 மணி நேரம் " என்ற சப்ஜெக்ட்டுடன் இருந்தது...

_________________________________
கிட்டத்தட்ட சாப்பாடு முடிக்கும் தருவாயில் கார்த்திக் கைபேசியில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வந்தான். அப்பாவை பார்த்ததும் காதில் இருந்த காதொலிப்பானை கழட்டிவிட்டு "ஹாய் ப்பா" என்றான்.
"டேய், ஹெட் போன்ஸ் போடாத, நல்லதில்லைன்னு சொன்னா கேளேண்டா.."
"கூல் ப்பா, கொஞ்ச நேரம்தான். ஒன்னும் ஆகாது.", எதுவும் நடக்காதது போல் தட்டை எடுத்துக் கொண்டே அமர்ந்தான்.
தனக்கு வந்த மெயில் ஞாபகம் வர, சுவாமி கண்ணில் கேலியோடு சிரித்துக் கொண்டே "கடைசி 30 மணி நேரம்" என்று பயமுடுத்தும் தொனியில் கார்த்திக்கை நோக்கி சொன்னான். அவன் எந்த சலனமும் இல்லாமல் ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே ரொட்டியை தின்று கொண்டிருந்தான். சுவாமி கொஞ்சம் எரிச்சல் வந்தவன் போல், சற்று எழுந்து அவன் காதைப் பிடித்து திருகி,
"டேய், நா உனக்கு அப்பன்டா" என்றான்.
"ஏங்க, சாப்டும் போது என்ன வெளாட்டு, அவனோட காத விடுங்க"
"உனக்கு தெரியாது உன்னோட திருபுத்திரனோட வேல, என்கிட்டயே வம்பு பண்றான் ராஸ்கல்"
"அப்பா, நான் என்னப் பண்ணேன்"
"நடிக்காத மகனே, உன்னோட மெயில் விளையாட்ட எல்லாம் மூட்ட கட்டி வை முதல்ல"
"என்ன மெயில் ப்பா, எனக்குப் புரில.நான் இப்போ எதுவுமே அனுப்பலையே"
"கார்த்திக், வெளாட்றது ஓகே,,ஆனா பொய் சொல்றது தப்பு"
"ப்ராமிஸ் ப்ப்பா, நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியல."
"டேய், 6 மணி நேரத்துக்குஒரு மெயில் அனுப்ச்சு வெளாடிட்டு இப்போ புரியலன்னு சொல்லாத"
"அப்பா, ஐ கெஸ் யு ஹேவ் காட் சம் ப்ரான்க் மெயில். பட் ஐ ப்ராமிஸ், இட்ஸ் நாட் மீ"
"எனக்கு இப்போ நிஜமாவே கோபம் வருது கார்த்திக்"
"அப்பா, அம் நாட் ப்லப்பிங். நான் எதுவும் உங்கள கலாட்டா பன்னல"
அவன் நடிப்பது போல் தெரியவில்லை. லேசாக பய ரேகைகள் உடல் முழுக்க பரவ தொடங்கின. வேகமாக மொபைல் போனை எடுத்து ஜிமெயிலை திறந்தான். கண்களும் கை விரல்களும் பதட்டத்துடன் மெயில்களை மேய்ந்தன.
'கடைசி 12 மணி நேரம்" என்ற சப்ஜெக்ட், நேரம் 3.29 p .m . பார்த்ததும் தலை சுற்றியது.
"அப்பா, நீங்க மட்டும் சாப்டும் போது மொபைல் யூஸ் பண்றீங்க"
"வில் யு ஷட் அப்."
வித்யா குழம்பினாள், அவனுடைய பதட்டம் அவளையும் பற்றிக் கொண்டது.

பயத்துடன் அந்த மெயிலை திறந்தான், வழக்கம் போல் ஒரு வாசகம்..
"பகல் கனவு, அதிலும் பேய் கனவு, கடைசி 12 மணி நேரம் - வாசாபி "

கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. கண்கள் மெல்ல மூட, முகம் சரிந்து சாப்பாட்டுத் தட்டு நோக்கி கவிழத் தொடங்கியது.
----------------------------------
கண்கள் திறக்க போராடின, மலையை அசைப்பது போல் இருந்தது. மெல்ல மெல்ல கண்கள் திறந்து பார்த்தான். மிகவும் பலவீனமாக உணர்ந்தான். கவலை, பயம், பதட்டம் எல்லாம் கலந்த முகத்துடன் வித்யா அருகிலேயே அமர்ந்திர்ந்தாள். இவன் கண் விழித்ததுதான் தாமதம்,
"என்னங்க நீங்க, இந்த மாதிரி மிரட்டல் எல்லாம் வந்தா உடனே சொல்றதில்லையா??""
"ஸ்பாம் னு நெனச்சேன்டி..இப்பக் கூட எனக்கு கொழப்பமாத்தானிருக்கு....சம்திங் இஸ் ராங். ஆனா, நாம பயப்படற அளவுக்கான்னு இன்னும் புரியல. "
"நாம ஜாக்கிரதையா இருக்குறது தப்பில்லைங்க..சேகர வரச் சொல்லி இருக்கேன்..இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவார்."
"சேகர் கிட்ட எதுக்குப்பா சொன்ன, போலீஸ் கிட்ட போற அளவுக்கு இது..."
"இது கொல மிரட்டல் மாதிரி தெரியுதுங்க, அதென்ன சின்ன விசயமா..அப்டியே போலீஸ் கிட்ட சொல்லற அளவுக்கு பெரிய விசயமா இல்லைனாக் கூட, ப்ரெண்ட் கிட்ட சொல்லலாம் தான.."
சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
__________________
நான்கு மெயில்களையும் பார்த்துவிட்டு, "அதென்னடா நாலாவது மெயில் ல கனவு பத்தி இருக்கு, என்ன அது, யார்கிட்ட எல்லாம் அத ஷேர் பண்ண"
"எனக்கும் புரியல டா..ஆபீஸ் கலீக்ஸ் ரெண்டு பேர் கிட்ட கேஷுவலா சொன்னேன், ஆனா அவுங்க இந்த மாதிரி ஆள் எல்லாம் இல்லடா..."
"அது ஒனக்கு டா, அண்ட், அவுங்க மூலமா வேற யாருக்கும் கூட தெரிஞ்சிருக்கும். அவுங்க நம்பர்ஸ் எல்லாம் குடு.."
அந்த சமயம் வீட்டின் கடிகாரம் ஒரு மணி அடித்தது..9.30 மணி, மூளைக்குள்ளும் மணியடிக்க சுவாமி வேகமாய் கைபேசி எடுத்து மெயில்களை பார்த்தான் சரியாய் ஒரு நிமிடம் முன்னால் எதிர்பார்த்தபடி அந்த செய்தி வந்திருந்தது. "கடைசி ஆறு மணி நேரம்", சேகரும் சேர்ந்து பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சேகர் வேகமாய் அந்த மெயிலை திறந்தான். உள்ளே
"எந்த நண்பனும் உயிர் காக்க முடியாது, கடைசி ஆறு மணி நேரம் - வாசாபி ". அதிர்ச்சி அலைகள் சேகர் முகத்திலும் தெரியத் தொடங்கின.
"வாட் தி ஹெல்.. உன்ன யாரோ ரொம்ப க்லோஸா வாட்ச் பண்றாங்க..ஆனா கவல பட வேணாம்.. அவனோட கணக்கு படி கூட நமக்கு 6 ஹவர்ஸ் இருக்கு.. இன்டர்நெட் யூஸ் பண்ணியிருக்கதால, கண்டு பிடிக்க நமக்கு ரொம்ப நேரம் தேவை இல்லை. லீவ் இட் டு மீ அண்ட் பீ பீஸ்புல்."
கைபேசியில் சில எண்களை தட்டிவிட்டு, "கணேஷ்,, சாரி டு ட்ரபுள் யு இன் தி லேட் ஹவர்ஸ். ஒரு கேஸ் விசயமா சின்ன ஹெல்ப்"
"........."
"ஹாஹா, தேங்க்ஸ் கணேஷ்.. எப்பவும் போல தான், ஒரு மெயில் இருக்கு..அது மூலமா அனுப்பினவன ட்ரேஸ் பண்ணனும்."
"......"
"ஷுர் ..டீடைல்ஸ் அனுப்புறேன்..."
"................"
-----------------------------------------------
அடுத்த அரை மணி நேரத்தில் அத்தனை தவகல்களும் கையில் இருந்தன.
"நான் சொல்லல, நமக்கு நெறைய நேரம் இருக்குனு..அட்ரஸ் கூட கிடைச்சிருச்சு..புடிச்சிடலாம்..இங்க ரெண்டு பேர் சர்வேலென்ஸ் க்கு இருப்பாங்க..நீங்க எல்லாரும், எப்பவும் போல லைட் எல்லாம் ஆப் பண்ணிட்டு தூங்குங்க, ஆர், தூங்குற மாதிரி நடிங்க.. உங்க பெட் ரூம் கு வெளில ஒருத்தர் காவல்கு இருப்பார்..டோன்ட் பீ ஸ்கேர்ட்."
சொல்லிவிட்டு கூட இன்னும் ஐந்தாறு காவலர்களுடன் அந்த விலாசம் அடைந்த பொது கடிகாரம் பதினொன்று மணிக்கு பக்கத்தில் நெருங்கி கொண்டிருந்தது. அது ஒரு சராசரி நடுத்தர வீடு. ஒரு மாடி இருந்தது, சாதரணமாக தென்பட்டது. உள்ளே வெளிச்சம் எதுவும் இல்லை.
"சார், உள்ள யாரும் இல்லையோ?""
"மே பீ, ஆனா நம்ம இங்க இருந்து தான் ஆரம்பிக்க முடியும்."
அழைப்பு மணியை அழுத்தி 5 நிமிடம் வரை எதுவும் பதிலில்லை, உள்ளே ஒரு சத்தமும் வரவில்லை.
"பாய், கதவ உடைங்க". ஆஜானுபாகுவான ஒருத்தர் கையில் ஒரு இரும்பு கம்பியுடன் முன்னே நடந்தார். ஒரு நிமிடம் கூட இல்லை, கதவு வழி விட்டிருந்தது. கதவை திறந்ததும், கொஞ்சமாய் கெட்டநாற்றம் வந்தது.
"சார், எதோ தப்பு இருக்கு சார்,"
கைபேசியின் வெளிச்சத்தில் முன்னேறி, சுவர் ஓரம் இருந்த பொத்தான்களை அழுத்தி அறைக்கு விளக்கேற்றினான். இன்னும் வீட்டிற்க்குள் ஒரு சலனமும் இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டிற்க்குள் முன்னேறினர். துர்நாற்றம் அதிகமாகிக் கொண்டே போனது. என்ன இருக்கும் என்ற பதட்டமும், குமட்டிக் கொண்டு வந்த உணர்வும், அவதியாய் இருந்தது. கைகள் துப்பாக்கிகளை அழுத்திப் பற்றிக் கொண்டன. அடி மீது அடி வைத்து மாடியில் ஏறினர். கிட்டத்தட்ட வாந்தி வந்தது...மேல் ஏறியவுடன் மூலையில் இரண்டு அறைக் கதவுகள் தெரிந்தன. ஒரு சிலரின் முகங்கள் நடுக்கத்தை மறைக்கவில்லை. முதல் கதவை திறந்து உள்ளே இருந்த விளக்கை உயிர்ப்பித்ததில் ஒன்றும் தெரியவில்லை. அடுத்து இரண்டாவது கதவு மூடி இருந்தது. எல்லோரும் ஆயுத்தமாகினர். அணைத்து துப்பாக்கிகளும் கதவை நோக்கி இருக்க, இரண்டு பேர் வேகமாய் கதவை தள்ளினர். போன வேகத்தில் இருவரும் பின் நோக்கி வந்தனர் குமட்டிக் கொண்டு..உள்ளே இருள்.
கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டிற்க்குள் முன்னேறினர். துர்நாற்றம் அதிகமாகிக் கொண்டே போனது. என்ன இருக்கும் என்ற பதட்டமும், குமட்டிக் கொண்டு வந்த உணர்வும், அவதியாய் இருந்தது. கைகள் துப்பாக்கிகளை அழுத்திப் பற்றிக் கொண்டன. அடி மீது அடி வைத்து மாடியில் ஏறினர். கிட்டத்தட்ட வாந்தி வந்தது...மேல் ஏறியவுடன் மூலையில் இரண்டு அறைக் கதவுகள் தெரிந்தன. ஒரு சிலரின் முகங்கள் நடுக்கத்தை மறைக்கவில்லை. முதல் கதவை திறந்து உள்ளே இருந்த விளக்கை உயிர்ப்பித்ததில் ஒன்றும் தெரியவில்லை. அடுத்து இரண்டாவது கதவு மூடி இருந்தது போல் இருந்தது. எல்லோரும் ஆயுத்தமகினர். அணைத்து துப்பாக்கிகளும் கதவை நோக்கி இருக்க, இரண்டு பேர் வேகமாய் கதவை தள்ளினர். கதவு திறக்க, போன வேகத்தில் இருவரும் பின் நோக்கி வந்தனர், குமட்டிக் கொண்டு.. வேக வேகமாய் எல்லோரும் கைக்குட்டை கொண்டு முகத்தை மூடிக் கட்டினர். கதவை தள்ளிக் கொண்டு வேகமாய் உள்ளே சென்று "ஹான்ட்ஸ் அப்" என்று சேகர் கத்தியதற்கு எந்த அசைவும் உள்ளே இல்லை..ஆனால் நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது. அறையின் லைட்டை உயிர்ப்பித்ததும் அனைவரின் கண்களிலும் அதிர்ச்சி..இப்படி ஒன்றை அது வரை அவர்கள் பார்த்ததே கிடையாது. ஒவ்வொரு திசையிலும்ஒரு பிணம், நடுவில் கண்கள் அகல திறந்து கொண்டு, வாயோரம் ரத்தக் கரையுடன் ஒருவன். அந்த உடல்கள் ஒவ்வொன்றும் அழுக தொடங்கி இருந்தன, ஆனால் ரத்தம் முழுதும் உறிஞ்சப் பட்டது போல் உடல் சுருங்கி இருந்தன..அவன் எந்த அதிர்ச்சியும் காட்ட வில்லை.
"அசஞ்சா சுட்ருவோம்". எல்லோரும் நெருங்கினர்..
அவன் இன்னும் அசைய வில்லை. கண்கள் பார்க்கவே பயம் கொடுத்தன.
"மிஸ்டர், டோன்ட் ட்ரை எனி ட்ரிக்ஸ்" கையில் துப்பாக்கியை தாங்கிய படியே சேகர் முன்னேறினான்..அமர்ந்திருந்த அவன் கரு விழிகள் மெல்லமாய் நகர்ந்து சேகரை பார்த்தது..அந்த நொடியே அவனுக்கு நெஞ்சு அடைத்து கொண்டு வந்தது போல் இருந்தது, உடல் வேர்த்தது..அவனுடைய ஈரக் குலை அறுந்து போனது. சிறு வயது முதல் இப்படி ஒரு பயம் அவனுக்கு வந்ததில்லை... எல்லோரும் அருகில் நகர, வேகமாய் அவன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து கையை மடக்கிப் பிடித்தனர். இத்தனை வெப்பத்திலும் அவன் உடல் சில்லென இருந்தது...