மழை
காற்றின் காமம்,
எரியும் மேகம்,வியர்வைத் துளியாய் கொட்டிடும் வானம்.
அண்டவெளியில்
ஓர் அற்புத அரங்கம்,
வெள்ளி கற்களை வெட்டிடும் சுரங்கம்.
விண் கூடும் ,
பின் மண் சேரும் ,கற்பு தாண்டிய காதல் ஞானம் .
பூமிப் பந்தின்
சுத்தம்,
இது வாழும்
உயிர்களின் ரத்தம்,கோடிக் கணக்கில் முட்டினாலும், காதில் இனிக்கின்ற சத்தம்.
காற்று கட்டிய
வின் கழிகள்,
நிறைந்து
வழிந்திடும் தேன் துளிகள்,அனாதை மரங்களை குளிப்பாட்ட, வீதி வந்த தேவதைகள்.
வர்ணம் பார்க்காத இலவச தாய்ப் பால்,
தலைகள் கொய்யாத அழகிய கூர்வாள்ஆவதும் உண்டு அழிவதும் உண்டு, உண்மையில் மழையே நீயொரு பெண்பால்.
2 கருத்துகள்:
I suggest you not take up any job which might distract you from this talent you have. My mom read this and says you are better than Vairamuthu. Though it might be an overkill, you should do this more often
Loved the last 3 lines.. Nice..Aareefha(BIM 22)
கருத்துரையிடுக