தலை முழுதும் பாரமாய் இருந்தது. உடல் எங்கும் சோர்வு. என்னை சுற்றி எதோ 'விஷ்ஷ் ' என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போல் இருந்தது. இது வரை கேட்டிடாட ஒரு சத்தம். அனால், நான் இப்போது கண்டஹவில் அல்லவா இருக்க வேண்டும். பியா!! எங்கே போனாள்? நான் ஒரு வேளை மயங்கி இருக்க வேண்டும். அவள் என் பக்கத்தில் தானாகவே வந்திருப்பாள். கண்கள் திறந்து பார்க்க எத்தனிக்கிறேன். முடியவில்லை. வேறு வழி இல்லை. நான் கண்களை திறந்துதான் ஆக வேண்டும். பியாவை கூட்டிக் கொண்டு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும். ரே யோடு சவால் வேறு விட வேண்டும். நேரம் இல்லை, சீக்கிரம் விழிக்க வேண்டும். ஒரு வேலை ரொம்ப நேரம் ஆகி இருந்தால் வீட்டில் வேறு பதட்டம் ஆகி இருப்பார்கள். என்னால் முடியும். 'கண்களே, உதவி செய்யுங்கள்'. உள்ளுக்குள் கெஞ்சினேன்.கொஞ்சமாய் கண்கள் திறந்தன, ஆனால் பார்வைக்கு எதுவும் சரியாய் புலப் படவில்லை. வெளிச்சம் மிகவும் குறைவாய் இருந்தது. ஐயோ!! இரவாகி விட்டதா? கண்களை அகலத் திறந்தேன். சுற்றிலும் மெல்லிய வெளிச்சம். கண்களுக்கு மேலே வானம் அல்லவா தெரிய வேண்டும். எட்டும் தூரத்தில் வானம் இருக்க வாய்ப்பில்லையே. இது காடில்லை. ஏதோ மெத்தை மேல் இருக்கிறேன். இது ஒரு வீடாய் இருக்க வேண்டும். யாரேனும் என்னைக் கண்டெடுத்து இங்கே அழைத்து வந்திருக்க வேண்டும். பியா வும் இங்கு தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும்.
உடலை அசைப்பது கடினமாய் இருந்தது. இத்தனை சோர்வு எப்பொழுதும் இருந்தது கிடையாது. தலையை தூக்கிப் பார்த்தேன். ஏதோ வீட்டின் அறை போல் இருந்தது. ஆனால் மிகவும் எளிமையாய் இருந்தது. அறைக்குள் வேறு எதுவும் பெரிதாய் இல்லை. கால்களை அசைக்க முடிந்தது. எழுந்து நிற்க முயன்றேன். உடலின் மொத்த சக்தியையும் ஒன்று சேர்த்தேன். எழுந்து நின்றேன். இவை என்னுடைய கால்களா? கொஞ்சம் மெலிவாய் தெரிந்தன. அட, என் கைகள், உடல் எல்லாம் காலையை விட மெலிவாய் தெரிகின்றது. ஒரு நாளில் இதெப்படி சாத்தியம்? குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னில் படரத் தொடங்கியது. எதுவும் யோசிக்க முடியவில்லை. அந்த நேரம் அறைக்குள் ஒரு இனிய குரல். "வணக்கம் நண்பரே. நன்றாக இருக்கிறீர்களா?". குரல் வந்த திசையில் யாரும் இல்லை. அது ஒலிப்பெருக்கி. நான் எழுந்தவுடன் எப்படி என்னுடன் பேசுகிறார்கள். இங்கே கேமராக்கள் இருக்க வேண்டும். ஆனால் என்னை எதற்கு கண்காணிக்க வேண்டும்! பதற்றத்தை மறைத்துக் கொண்டு "என்னை காட்டில் இருந்து அழைத்து வந்ததற்கு நன்றி. என்னுடைய பியா இங்கு இருக்கிறாளா? என்னுடைய வீட்டில் என்னை தேடிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் உதவ முடியுமா?". இதை கேட்டதும் அந்தக் குரல் சிரிக்க தொடங்கியது. ஏனோ, இப்போது எனக்கு அது இனிமையாய் இல்லை.

என் முக மாற்றத்தை கவனித்திருக்க வேண்டும். "மண்ணியுங்கள் நண்பரே. உங்கள் பியா பத்திரமாக இருக்கிறாள். ஆனால், உங்கள் வீட்டிற்கு நீங்கள் தொடர்பு கொள்ள எங்களால் இப்போது உதவி செய்ய முடியாது என்று நினைக்கிறேன் ". எனக்கு கோபம் அதிகமானது. எங்கிருந்தோ பேசும் அவள் கையில் கிடைத்தால் அவளை அறைந்து விடுவேன். 'உங்கள் உதவி இதற்கு மேல் எனக்கு தேவை இல்லை. என்னை காப்பாற்றியதற்கு நன்றி. நான் கிளம்புகிறேன். எங்கே எனது பியா?' என்று கோபத்தில் கத்திய பிறகு தான் கவனித்தேன். இந்த அறையில் கதவுகளே காணவில்லை! எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை யாரோ காப்பாற்றியது போல் இல்லை! அடைத்து வைத்திருப்பது போல் தோன்றியது. குழப்பமும் கோபமும் சேர்ந்து எரிச்சல் அடைந்தேன். 'நான் வெளியே போக வேண்டும். எனக்கு நேரமாகிறது. எவ்வளவு நேரம் இங்கே நான் இருக்கிறேன்!' என்றேன் ஆத்திரமாய். அந்த குரல் எந்த பதட்டமும் இன்றி "நண்பரே, உண்மையில் நேரம் இல்லை, நீங்கள் இங்கு வந்து நாட்கள் ஆகிறது." என்றது. எனக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது. சில நாட்களாய் இருக்கிறேனா!! அதனால் தான் உடல் இளைதிருக்கிறதா!! அனிச்சையாய், 'எத்தனை நாட்கள்?' என்றேன். அந்தக் குரல் "என் பதிலை கேட்டு நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். உங்கள் கிரஹ கணக்கின் படி நீங்கள் இங்கு வந்து 157 நாட்கள் ஆகின்றது. '157 நாட்களா!!!' எனக்கு உயிர் நின்று விடும் போல் இருந்தது. அதென்ன 'உங்கள் கிரஹ கணக்கு' என்று அவள் சொன்னாள்!! அப்படி என்றால் அவள் யார்? நான் எங்கே இருக்கிறேன்? '. ஒரே நேரத்தில் ஆயிரம் கேள்விகள் என்னை வருத்தி எடுத்தன. நான் அனைத்தையும் நம்ப மறுத்தேன். "உங்கள் கிரஹ கணக்கு" அவள் சொன்னது மட்டுமே எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. அவள் வேற்று கிரஹ வாசியா!!! கண்கள் சுழன்றன. மீண்டும் மயான அமைதி.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக