சனி, 19 ஜனவரி, 2013

'பற பற பறவை' பாடல் - எனது வரிகள்

நீர்பறவை படம் பார்த்து ஒரு வாரம் வரையிலும் அதை பற்றிய நினைவு மறையவில்லை. 'பற பற பறவை' பாடல் மிகவும் சுகமாய் இருந்தது. கிட்ட தட்ட இந்த ஒரு வாரத்தில் 50 முறை கேட்டு இருப்பேன். பேருந்துக்காக காத்திருந்த நேரத்தில், ஒரு நல்ல வரி தோன்றியது...அப்படியே இந்த கதை  களத்துக்கு ஏற்ப முழு பாடலும் எழுதலாம் என்று, நாலைந்து நாளாய், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அருளப்பசாமியின் (கதை நாயகன்) பார்வையில் யோசித்து, எழுத முயற்சி செய்தேன்..அதன் விளைவு கீழே :)

இது ஒரு புது  தாயின் மடியா,  
மறுபடி என்ன  தொப்புள் கொடியா ,

உன் மார்பில் சாய மனம் துடிப் பதேன்?

எனதுயிர் என்ன அலையின் நுரையா,
உன் மணல் வந்த மழையின் துளியா,
உன்பார்வை தொட்டவுடன் கரைவதேன்?

மேகம் சூழ்ந்த என்வாழ்க்கைக்கு ஒற்றை நிலவு நீயடி 
போதை தேடுமென் கண்ணுக்கு நீயே பாதை மாற்றடி 

தண்ணீர்  மோதும் பாறை போல,
உன்னைத் தேடி கர கர வென கரையுது மனசு.....
                         ____________________
என் ஆலய தேவதை போலே, கண் முன் நீ  தோன்றியதாலே  ,
சிலுவைக்குள் சிக்கிக் கொள்ள துடிக்கிறேன், 

தரை வாழும் தவளை நானே, சிரகேற்றி பறக்க வைத்தாயே,
உன் தேசம் தேடி நானும்  தொலைகிறேன்..

வலையில் விழுகின்ற மீனுக்கு, உயிரும் சுமைவதை தானடி,
உனது வலையில் நான்  விழுந்த பின், தினமும் பிறக்கிறேன் ஏனடி?

தாயை தேடும் பிள்ளை போலே உன்னை தேடி கர கர வென  கரையுது  மனசு...
                                                                                                           ( இது ஒரு புது  ....)

                               __________________
கரை மீறும் படகை போலே, தரை மீது தவிகின்றேனே,
உன் காதல் கட்டி உள்ளே இழுத்திடு..

நிறம் இல்லா கடலும் நானே, பெருவான குடையும் நீயே,
உன் அன்பு நீலம் கொட்டி கொடுத்திடு,

தனித்து இருந்திடும் தீவுக்குள், வசிக்கும் பறவை நானடி,
உனது வானத்தில் இடம் கொடு,  உயர பறப்பேன் பாரடி
                                        (அல்லது)
உலகம் ஒதுக்கிட்ட பேயடி, நான் மதுவில் எரிகின்ற தீயடி,
கருணை நிறைந்த நீ தாயடி, என்னைதூஇமயாக்கிடும் உன் விழி,

தாயை தேடும் பிள்ளை போலே உன்னை தேடி கர கர வென  கரையுது  மனசு...
                                                                                                   ( இது ஒரு புது  ....)



கருத்துகள் இல்லை:

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...