மொழியை விற்பவன் கவிஞன்
அறிவை விற்பவன் அறிஞன்,
ஊரை விற்பவன் தலைவன்,
என்னை விற்பதால் நான் வேசி!!!
மேய்ப்பவன் எல்லாம் கடவுளாய் நிற்கும் உலகில்,
மேயப்படும் நான் ஆடாய் நிற்கிறேன்,
பயிர் போலத்தான் நானும்,
விளைந்ததும் விலைக்கு வந்து விட்டேன்...
தின்றவன் வயிறு நிறைந்த பின்னே,
பாத்திரம் மட்டும் எச்சில் ஆனது எப்படி?
மொய்ப்பவனெல்லம் இங்கு ஈ இல்லையாம்,
தேன் கிண்ணம் நான் மட்டும் தப்பானது எப்படி?
உம் காம நெருப்பில் நான் நெய்யாக எரிகின்றேன் ,
கனல் தீர்ந்த பின் ஏன் கரியாக கிடக்கின்றேன்!!
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்,
சொன்னவன் ஞானி, வாழ்பவள் வேசி!!
எத்தனை பேர் கூடினாலும்,
நான் வாக்கப்பட்டது என்னவோ வறுமைக்குத் தான்..
இருளோடு நான் தேவதையா!!
உலகோடு ஒரு தே______ ?! :(

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக