செவ்வாய், 29 ஜனவரி, 2013

விஷ்வரூபம்

நம்ம நாட்ட நெனச்சா சிரிப்பு தான் வருது, உண்மைய சொல்லனும்னா பயமாவும் இருக்கு. ஒரு பழமொழி சொல்லுவாங்களே, 'ஈர பேனாக்கி , பேன பெருமாளாக்குற' கதைன்னு,,,அய்யயோ, ஹிந்துத்வா சகோதரர்களே, பெருமாளோட பேன சேத்து வச்சு பேசுறேன்னு பூகம்பத்த கிளப்பிடாதேங்க. நான் பொதுவா சொன்னேன். தூண்லயும் துரும்புலயும் இருக்குற உங்க பெருமாள் பேன்லயும் இருப்பாருன்னு ப்ரீயா விடுங்க சாமி. இப்பெல்லாம் கடவுளோட பேர சொல்லி அரசியல் பன்றது பிரபலமாச்சே. உங்களுக்கெல்லாம் என்னய்யா வேணும், இன்னமும் ஊர் பக்கமெல்லாம் அம்ம போட்டா,  முஸ்லிமா இருந்தாலும் மாரியம்மன் கோவில்ல வேப்பெல தீர்த்தம் வாங்கிட்டு போவாங்க, காய்ச்சல் கீய்ச்சல் வந்தா ஹிந்து குழந்தையா இருந்தாலும் தர்கா போயி மந்திரிச்சுட்டு வருவாங்க. இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கல, அதான!! இந்த சினிமா படத்த இப்படி கூட பாக்கலாம்னு தெரியாத சராசரி மக்களோட மனசுல கூட விஷத்த வெதச்சுட்டீங்க. படிச்ச மக்க மாரு கூட ஹிந்து முஸ்லிம்னு பிரிச்சு பேசுற அளவுக்கு ஒரு பிரச்சன பண்ணிடீங்க. சந்தோசமா சாமிகளே !!

நான் பிறந்தது ரஹீம் தெரு அப்டின்னுஇஸ்லாமிய நண்பர்கள் அதிகமா வாழ்ற ஒரு குட்டி தெரு. என்னோட மொத  மூணு நாலு வயசு வரைக்கும் முழுக்க முழுக்க இஸ்லாமிய சொந்த பந்தங்களுக்கு நடுவுல தான்  வளந்து இருக்கேன் . மைதீன் மாமா, தாதி, சையது, நிலாபர் எல்லாரும் இப்ப கூட நெனப்புல இருக்காங்க. நான் கூட ரெண்டு வயசுல கொஞ்சம் உருது பேசுவேன்னும், முட்டி போட்டு எங்க வீட்டுக்குள்ள தொழுக பன்னுவேன்னும் எங்கம்மா சொல்லுவாங்க. எங்க அப்பா சபரி மல போகும் போது தெருல இருக்குற எல்லாரும் வந்து சரணம் பாடுவாங்களாம். இன்னும் கூட பழைய ப்ளாக் அண்ட வைட் போட்டோ எல்லாம் வீட்ல இருக்கு. இப்பவும் ஊர்ல இருந்து மெக்கா போற தெரிஞ்சவுங்களுக்கு அப்பா காணிக்கை குடுத்துட்டு வருவாரு. என்ன பொறுத்த வர, இஸ்லாமியரோட அடையாளமா நான் நெனைக்கிறது என்னோட சின்ன வயசுல பாத்த அந்த அன்பான மனுசங்க தான். ஆனா திடீர்னு பாத்தா எங்கேயோ ஆப்கான் ல இருக்குற தாலிபன் தான் இஸ்லாமிய அடையாளம் அப்டின்ற மாதிரி ஒரு சில அரசியல் சார்ந்த அமைப்புகள் எல்லாம் பேசுறது மனச காய படுத்துது. எத்தனையோ இஸ்லாமிய பெரியவுங்க, 'இந்த தாலிபனும் அதே போல பல நாடுகள்லயும் இருக்குற மதவாதிகள் யாருக்கும் இஸ்லாம் அப்டினாலே என்னான்னு தெரியாது, அல்லாஹ் பேர சொல்றதால அவுங்க எல்லாம் முஸ்லிமாக முடியாது ' அப்டின்னு சொல்லி இருக்காங்க. ஆனா கூச்சமே இல்லாத அரசியல் வாதிங்க சம்மந்தமில்லாமா எங்கேயோ இருக்குற இனவாதிங்கள தங்களோட அடையாளமா பேசுறது கேட்டா எரிச்சலும் கோபமும் தான் வருது. இதெல்லாம் பேசுறவங்களுக்கு  ஆப்கான் ல பிழைக்க பயந்து வேற நாட்டுக்கு போன சராசரி முஸ்லிம் மக்கள் யாரு பத்தியாவது தெரியுமா!! லண்டனில் டாக்ஸி ஓட்டும் ஒரு ஆப்கான் சகோதரர் , வல்லரசுங்களோட சதியால எதுக்கு இதெல்லாம் பண்றோம்னு தெரியாமவே பண்ணிட்டு இருக்குற தாலிபன் பத்தி புலம்பி கேட்டு இருக்கேன். சராசரி மனுசங்களுக்கு எதிரான வன்முறைய கண்டுக்காதவுங்க எல்லாம் ஒரு சினிமாவ கண்டிக்கிறாங்க.

எந்த வரலாறும் தெரியாம, எதாவது பேசி மக்கள குழப்பி அரசியல் பண்றது ஒன்னும் புதுசு இல்ல. ஆனா உலகம் எங்க போயிட்டு இருக்குனு கொஞ்சம் பாருங்க கணவான்களே. ஒரு ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஐரோப்பா வுல, மத்திய ஆசியால புனித போர்னு எவ்வளவோ கொடுமைங்க நடந்து இருக்கு. இந்தியா ல சைவம் வைணவம் அப்டின்ற பேருல எத்தனயோ பேர் செத்து இருப்பாங்க. ரொம்ப நூறு வருஷத்துல சின்ன அரசுங்க, பெரிய ராஜ்யங்களோட  சண்டைல மக்க்கள கொன்னு குவிச்சு இருக்காங்க. ஒரு 300 வருஷத்துக்கு முன்னாடி இம்பீரியலிசம் ன்ற பேர்ல ஒரு சில பேரரசுங்களோட ஆட்டத்துல எத்தனையோ நாடுங்க சிக்கி செதறி இருக்கு. இப்போ ஒரு 70,80 வருஷத்துக்கு முன்னாடி வல்லரசு நாடுங்க கொஞ்ச பேரால 2 உலக போர் வந்து போய் இருக்கு. ஆனா இன்னைக்கு நிற பேதம் பாக்குறது அநாகரிகம்னு  பெரும்பாலும் ஏத்துக்கிட்ட சமுதாயத்துல இருக்கோம். உலகம் ஒன்னும் அமைதி பூங்கா வா மாறல. ஆனா ஒரு சில நாடு தவிர மற்ற இடத்தில எல்லாம் தினசரி வாழ்க்கைல போர் பயம் இல்ல. இன்னும் ஒரு சில நூறு வருஷத்துல, இன்னைக்கு இருக்குற பொருளாதார குற்றம் எல்லாம் கூட மறஞ்சு போயி மனுஷங்க சந்தோசமா இருப்பாங்கனு ஒரு சின்ன நம்பிக்கை இருக்கு. இதுக்கு நடுல உங்க அரசியலால நாட்ல மத பிரிவினைய கொண்டு வராதீங்க. மக்களே, நாம கூட கொஞ்சம்உஷாரா தான் இருக்கணும். சாதி மதத்த பத்தி பேசுற இயக்கங்கள் கிட்டவும் அரசியல் வாதிங்க கிட்டவும் பீ கேர் புல்.

முடிக்கிறதுக்கு முன்னாடி, நம்ம விஸ்வரூப பிரச்சனைக் காக நான் யோசிச்ச ஒரு சின்ன மொக்கை. " வீரப்பன் காளி பக்தன்னு சொன்னா, உடனே காளி பக்தன் எல்லாரும் வீரப்பன்னு நீ அவமான படுத்துற" அப்டின்னு சொன்னா என்னங்க நியாயம் ????



1 கருத்து:

Hima சொன்னது…

Saadhigal illayadi paappa nu sonnavaraiyum madhikka maataanga.. nalla thagaval solravanga yaaraiyum nimmadhiya vidamaatanga... thannalam mattum karudhum suya sindhanai attra thaaniyangigal... robots with induced thoughts..Well said Parthi. .

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...